எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு 
தற்போதைய செய்திகள்

எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இலக்கியத்திற்கான பால புரஸ்கார் சாகித்ய விருது வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் எழுத்தாளர் மு.முருகேஷின் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' எனும் சிறுகதை தொகுப்பு தேர்வாகியுள்ளது.

30 ஆண்டுகளாக கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறைகளிலும் பல்வேறு புத்தகங்களை எழுதி வருபவர் மு.முருகேஷ். பழைய பாட்டியும் புது வடையும், வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை, சிறுவர் நாடகக் களஞ்சியம்
 உள்ளிட்ட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு குழந்தைகள் சிறுகதைகள் என்ற அவரின் நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்டத்தின்கீழ் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT