புத்தாண்டுப் பிறப்பையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் நூல்களுக்கு 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
2022 ஆண்டுப் பிறப்பையொட்டி, டிசம்பர் 31, ஜன. 1, 2 ஆகிய நாள்களில் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறும்.
இந்த நாள்களில் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாக என்.சி.பி.எச். நிறுவன மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன் தெரிவித்துள்ளார்.
அரசியல், அறிவியல், மொழி, கலை, இலக்கியம், தத்துவம், சிறுவர் நூல்கள், தன் முன்னேற்ற நூல்கள், மார்க்சியம் மற்றும் மெய்யியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் மற்றும் சோவியத் இலக்கியங்கள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் விற்பனையில் இடம் பெறுகின்றன.
சென்னை மற்றும் தமிழகமெங்குமுள்ள அனைத்து என்.சி.பி.எச். கிளை விற்பனையகங்களிலும் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.