தற்போதைய செய்திகள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

DIN

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ் ஆண்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டது. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக மொத்தம் 719 காளைகள் களமிறக்கப்பட்டன. 

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு அதைத்தொடர்ந்து போட்டிக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளைப் பிடித்த விராட்டிபத்து கண்ணன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT