தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து, 2018 அக்டோபருக்குப் பின் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பணப் பயன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
2018. அக்டோபருக்குப் பின் ஓய்வுபெற்ற திருச்சி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 65 பேருக்கு ரூ. 28 கோடி அளவுக்கு ஓய்வூதிய பணப் பயன் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி உதவியாளர் (பொது) / துணை ஆட்சியரைச் சந்தித்து சங்கத்தின் செயலாளர் எஸ். கலியமூர்த்தி, இணைச்செயலாளர் ஏ. நடராஜன், உதவித் தலைவர் என். ஜெகநாதன் ஆகியோர் மனு அளித்தனர்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் சுமார் 35 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதும் இவர்களுக்குப் பணிக்கொடை உள்பட ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.