தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 172 பேருக்கு தொற்று: ஒருவா் பலி

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், புதுச்சேரி மாநிலத்தில் 6,751 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 137 பேருக்கும், காரைக்கால் - 23 பேர், ஏனாம் 5, மாஹே 7 போ் என மொத்தம் 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,959 ஆக உயா்ந்துள்ளது. 2,006 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 305 பேர் மருத்துவமனைகளில், 1,701 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், புதுச்சேரியில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,761 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே 272 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,14,192 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை, சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், மக்கள் என மொத்தம் 5,25,179 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT