தற்போதைய செய்திகள்

தெலங்கானா: ஆதிலாபாத் மாவட்டத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

DIN

ஹைதராபாத்: கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெறும் முயற்சியில், 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' மூலம் பத்து லட்சம் மரக்கன்றுகளை ஒரு மணி நேரத்தில் நடவு செய்து ஒரு மகத்தான சாதனை புரிந்துள்ளது கிரீன் இந்தியா சேலஞ்ச் (ஜிஐசி) அமைப்பாளர்கள் சங்கத்தினர்.

முன்னாள் அமைச்சரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆதிலாபாத் எம்.எல்.ஏ. ஜோகு ராமண்ணாவின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா வனச்சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் அலோலா இந்திர கரண் ரெட்டி மற்றும் டி.ஆர்.எஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜோகினிபள்ளி சந்தோஷ்குமார், ஜி.ஐ.சி.யின் நிறுவனர் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, ​​ஆதிலாபாத் கிராமத்தின் துர்காநகரில் 200 ஏக்கர் பரப்பளவில் மியாவாகி முறையில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதேபோல், பெலா மண்டலத்தில் இரண்டு லட்சம் மரக்கன்றுகளும், நகர்ப்புறத்தில் 45,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், வீடுகளில் தலா 1,80,000 மரக்கன்றுகளும், சாலைகளின் இருபுறமும் 1,20,000 மரக்கன்றுகளையும் நடவு செய்தனர்.

இந்த திட்டமானது 30,000-க்கும் மேற்பட்ட டி.ஆர்.எஸ் உறுப்பினர்கள், உள்ளூர்வாசிகளின் பங்கேற்புடனும் பத்து பிரிவுகளாக பிரித்து, இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

2019-இல் துருக்கியில் நடப்பட்ட 3 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில்,  இந்த சவாலை கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பாளர்கள் முறியடிக்க போவதாகவும், நிகழ்ச்சியின் விடியோ பதிவு கின்னஸ் உலக சாதனை புத்தக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

2019-இல் துருக்கியில் நடப்பட்ட 3 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற நிலையில்,  இந்த சவாலை கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பாளர்கள் முறியடிக்க போவதாகவும், இந்த நிகழ்ச்சி விதிமுறைகளின்படி விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை கின்னஸ் உலக சாதனை புத்தக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து இந்திரா கரண் ரெட்டி கூறுகையில்,  இந்த கரோனா பெருந்தொற்று காலம் சுற்றுச்சூழல் மற்றும், காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது. எனவே எல்லோரும் மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று வலியுறுத்தினார். 

கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பசுமை பிரசாரத்தை தொடங்கி வைத்த சந்தோஷ்குமார், நான்காவது ஆண்டிற்குள் நுழைந்துள்ளதின் பகுதியாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று கூறினார். 


தொடர்ந்து 4-ஆவது முறையாக இந்த இயக்கத்தை தொடங்கி வைத்த  சந்தோஷ்குமார், அதன் ஒரு பகுதியாக இதுவரை ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT