தில்லியில் புதிதாக 53 பேருக்கு கரோனா
தில்லியில் மேலும் புதிதாக 53 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் மேலும் புதிதாக 53 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.07 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 14,09,325 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,015 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, தில்லியில் 743 பேர் நோய்த்தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.