ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது தன்னுடைய நோக்கம் என்னவாக இருந்தது என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது தன்னுடைய நோக்கம் என்னவாக இருந்தது என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் அதிவேக சதம் விளாசி அசத்தினார். அவர் தற்போது இரண்டாவது சீசனில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கமாக இருந்ததாக வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது, அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கமாக இருந்தது. பவர்பிளேவில் என்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பவர்பிளேவில் அதிரடியான தொடக்கம் கிடைத்தால், அதனை பயன்படுத்தி விக்கெட்டினை இழக்காமல் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டும்.
என்னுடைய இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 200 ரன்களுக்கும் அதிகமான ரன்களை எங்களால் இலக்காக நிர்ணயிக்க முடியும். 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்திப் பிடிப்பது எந்த ஒரு அணிக்கும் எளிதான ஒன்றாக இருக்கப் போவதில்லை. ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரே இலக்கு என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 252 ரன்கள் எடுத்தார். கடந்த சீசனில் அவர் அதிரடியாக 35 பந்துகளில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Rajasthan Royals player Vaibhav Suryavanshi has opened up about what his mindset was when he was picked in the IPL auction.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.