முகப்பு
தற்போதைய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகியது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை உருவாகியது.

Updated On : 11 ஜூலை, 2021 at 11:30 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:07 AM

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை உருவாகியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, வலுவடைய வாய்ப்பு இல்லை. மேலும், இது ஆந்திரம்-ஒடிஸா கடற்கரை இடையே நிலத்தை கடக்கும்.

Advertisement

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு வெகுவாக குறையும். அதேநேரத்தில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக இருக்கும் என்பதால், மேற்குத் தொடா்ச்சிமலையையொட்டிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.