பள்ளிகளில் காமராசரின் திருவுருவ படம் அமைக்கப்பட்டு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. 
தற்போதைய செய்திகள்

போடியில் காமராஜர் பிறந்த தினம்: கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

போடியில் வியாழன்கிழமை, முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

DIN


போடி: போடியில் வியாழன்கிழமை, முன்னாள் முதல்வர் காமராசரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வரும், கர்மவீரர் என்றழைக்கப்பட்டவருமான காமராசரின் 119 ஆவது பிறந்த தின விழா போடியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. போடி பகுதியில் உள்ள நாடார் வட்டாரக் குழு சார்பில் பேரணி நடைபெற்றது. பின்னர் போடி திருமலாபுரம் பகுதியில் உள்ள காமராசரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

காமராசரின் பிறந்த தினம் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் காமராசரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் காமராசரின் திருவுருவ படம் அமைக்கப்பட்டு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT