வாழப்பாடியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தினவிழா. 
தற்போதைய செய்திகள்

வாழப்பாடியில் காமராஜர் பிறந்தநாள் விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இவ்விழாவிற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மூத்த நிர்வாகி வி.எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஆத்தூர் நகர தலைவர் சண்முகம், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  119 ஏழை எளியோருக்கு, இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. 'மெகா சைஸ்' கேக் வெட்டி மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில், தமாகா நிர்வாகிகள், அண்ணாநகர் சண்முகம், கோனார் கணேசன், மகளிர் அணி நிர்வாகிகள் செல்லம்மாள், முத்தம்பட்டி சரசு, அத்தனூர்பட்டி பரமேஸ்வரி, விஜயலட்சுமி,  பிஜேபி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'காமராஜரைப் போன்று தற்கால அரசியல்வாதிகள் அரசியலில் தூய்மையும், நேர்மையும் கடைபிடிக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டுமென', தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகியும்,  அகில இந்திய காந்தி காமராஜர் கட்டிட மற்றும் பொதுதொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் வி.எம். சொக்கலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். விழாவின் நிறைவாக கஸ்தூரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT