சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 
தற்போதைய செய்திகள்

சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

DIN

 

சென்னை: 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிா்த்துப் போராடிய போராளி முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா. இன்று தனது 100 ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறாா்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.  பின்னர் சங்கரய்யா குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசியல் தலைவர்களில் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மூத்த தோழர் சங்கரய்யா பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாக வாழ்வுக்கு சொந்தக்காரராக அடையாளமாக விளங்குபவர். திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சங்கரய்யாவுக்கு தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT