தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். 
தற்போதைய செய்திகள்

பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை

சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

DIN

சீர்காழி: சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  தடுப்பூசி போட வந்தவர்களும் காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டது. 

காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் வரதராஜன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது அப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்ததால் முகாமில் பங்கேற்ற திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்களும் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று காமராஜர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT