திருச்சி அண்ணாசிலை அருகே அண்ணாமலைக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  
தற்போதைய செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தமிழகத்துக்கு தடுப்பூசி: பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தமிழகத்துக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

DIN


திருச்சி: நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தமிழகத்துக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக வியாழக்கிழமை பொறுப்பேற்க உள்ள நிலையில், அவர் கரூரில் இருந்து புதன்கிழமை சென்னை செல்லும் வழியில் திருச்சியில், அண்ணாசிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து  அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மேக்கேதாட் அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழக பாஜக எப்போதும் துணை நிற்கும். முன்னாள் பாஜக தலைவரும், தற்போதைய மத்திய    அமைச்சருமான எல். முருகன் தனது "சுயவிவர குறிப்பில் ” எல்.முருகன் கொங்கு நாடு, தமிழ்நாடு” என குறிப்பிட்டிருந்தார். இதனை புரிந்துக்கொள்ளாமல் ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.

குடியுரிமை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரானவை என்பது போல சிலர் உருவாக்கம் செய்கின்றனர். அவற்றில் இஸ்லாமியருக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. 

நிர்ணயித்த அளவை காட்டிலும் கூடுதலாகவே  தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 விழுக்காடு மட்டுமே மக்களுக்கு சென்று சேருகிறது. மீதி 70 விழுக்காடு ஊசிக்கான டோக்கன்களை திமுகவினரே வாங்கி செல்கின்றனர் என்றார்.

பட்டாசு வெடிக்க தடை: வரவேற்பின் ஒரு பகுதியாக பட்டாசு (வெடி) வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி பாஜகவினர் பெரிய பட்டாசு பண்டலை பிரித்து வெடிப்பதற்காக சாலையில் வைத்தனர். இதனைக் கண்ட போலீசார், பட்டாசு வெடிக்க அனுமதியில்லை, எனக்கூறி அவற்றை அகற்ற முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பாஜக வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அண்ணாமலையின் கார் வந்தடைந்தது. எனவே போலீசார் விலகிக்கொண்டதை அடுத்து
பாஜகவினர் பட்டாசு வெடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT