தற்போதைய செய்திகள்

அறநிலையத்துறை சார்பில் 2 பெண்கள் கல்லூரி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

DIN

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கல்லூரியின் ஆண்டு மலரை அமைச்சர் பொன்முடி வெளியிட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார். விழாவின் முடிவில் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் க.பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசுகையில், பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீகித இடஒதுக்கீடு, அரசு பணிகளில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை கொண்டு வந்தவர் கருணாநிதி. பெண்கள் நலனுக்காக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை கல்லூரி தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று சேகர்பாபு கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT