முகப்பு
தற்போதைய செய்திகள்

துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான நபரை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். சோதனையில் 810 கிராம் எடையிலான தங்கம் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →