முகப்பு
தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டி அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: சுற்றுலா வந்த 5 பேர் காயம்!

தம்மம்பட்டி அருகே கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தவர்களின் கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
தம்மம்பட்டி அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து
பகிர்:

தம்மம்பட்டி:  தம்மம்பட்டி அருகே கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தவர்களின் கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த மணிவண்ணன், குடும்பத்துடன், தனது எடியாஸ் காரில், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றார். காரை, அவரது உறவினர் பிரதீப்ராஜ் என்பவர் ஓட்டினார். சனிக்கிழமை காலை, தம்மம்பட்டியை அடுத்துள்ள முள்ளுக்குறிச்சி வழியாக சென்றபோது, கொல்லிமலை செக்போஸ்ட் அருகே, வளைவில் எதிரே வேகமாக வந்த,  டிப்பர் லாரி, கார் மீது மோதியது. 

இதில், காரில் இருந்த பிரதீப்ராஜ் (25),பத்மாவதி (35), மணிவண்ணன் (36), எஸ்வந்த் (10) மற்றும் 2 வயது சிறுவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

அவ்வழியே சென்றவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து, ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →