முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே அவசர ஊர்தி டயர் வெடித்து விபத்து:  கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிவந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான அவசர ஊர்தி
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணியை ஏற்றிவந்த அவசர ஊர்தி டயர் வெடித்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனா்.

சேராப்பட்டைச் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி(23). நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக 108 அவரச ஊர்தியில் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் செல்வி(52), அவரது நாத்தனார் அம்பிகா(32) ஆகிய மூவரும் புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதன்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனர்.

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமி

அங்கு அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அவசர ஊர்தியை ஆரூர் குப்பன் என்பவரின் மகன் கலியமூர்த்தி(36) ஓட்டி வந்துள்ளார்.

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி

இவருடன் மூங்கில்துறைப்பட்டு திருமலை மகள் உதவியாளர் தேன்மொழி(27), புதுப்பட்டு கிராம ஆஷா செவிலியர் மீனா ஆகியோர் வந்துள்ளனர். அவசர ஊர்தி கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் -  அரிய பெருமானூருக்கு நடுவே உள்ள அய்யனார் கோவில் முன்பு சென்றுகொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் நாத்தனார் அம்பிகா.

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண்ணின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் போது வழியிலேயே உயிரிழந்தார் என மருத்துவர் தெரிவித்தனர்.

அவரசர ஊர்தி ஓட்டுநர் கலியமூர்த்தி, அவரது உதவியாளர் தேன்மொழி, செவிலியர் மீனா மூவரும் காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →