தமிழகத்தில் முதல் முறையாக ரூ.100 -ஐ கடந்த பெட்ரோல் விலை 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக ரூ.100 -ஐ கடந்த பெட்ரோல் விலை: மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதுள்ளனர். 

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சுனாமி வேகத்தில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதுள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை சுனாமி வேகத்தில் பரவி வருவதையடுத்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்தது. 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  சனிக்கிழமை பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100.04 ஆகவும், ஸ்பூடு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.83 ஆகவும், டீசல் விலை ரூ.93.92 -ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.43 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக பெட்ரோல் ரூ.100-ஐ கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். 

கரோனா பெருந்தொற்றின் பொதுமுடக்கத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மறைமுகமாக மேலும் உயரும் என அனைத்து தரப்பினரும் கவலையடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொமதேகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞா்கள்

கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்

தருமபுரியில் நாளை விசிக முப்பெரும் விழா: தொல்.திருமாவளவன் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் பெண்களிடம் சிறுநீரக திருட்டு: இடைத்தரகா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT