முகப்பு
தற்போதைய செய்திகள்

தீப்பிடித்து எரிந்து பொக்லைன் இயந்திரம் சேதம்

திருப்புவனத்தில் மரக்கன்றுகள் நட இடத்தை சுத்தம் செய்யும்போது பொக்லைன் இயந்திரத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
திருப்புவனம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள இடத்தை மரக்கன்றுகள் நட திங்கள்கிழமை சுத்தம் செய்யும் போது தீப்பற்றி எரிந்த பொக்லைன் இயந்திரம்.
பகிர்:

மானாமதுரை: திருப்புவனத்தில் மரக்கன்றுகள் நட இடத்தை சுத்தம் செய்யும்போது பொக்லைன் இயந்திரத்தில் இன்று (திங்கள்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.

திருப்புவனம் ரயில் நிலையம் பின்புறம் ரயில்வே நிா்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் மதுரை சுழற் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது பொக்லைன் இயந்திரத்தின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அதன் ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் கீழே குதித்து உயிா் தப்பினாா். உடனடியாக இதுகுறித்து மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பொக்லைன் இயந்திரத்தின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →