திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே பாப்பாகுடி கிராமத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ராமராஜன். 
தற்போதைய செய்திகள்

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தியைசாமி மகன் ராமராஜன் (25), திருமணமாகாத இவர் சென்னையில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

தனது சகோதரி கணவர் இறப்பு சம்பவத்திற்கு பாப்பாகுடி கிராமத்திற்கு வந்த ராமராஜன் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே சனிக்கிழமை அதிகாலை பாப்பாகுடி பிள்ளையார்கோவில் ஊரணி அருகே ராமராஜன் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூவந்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அதன்பின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமராஜன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமராஜன் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்பது குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

பிளாக்பஸ்டரான சூ ஃப்ரம் சோ ஓடிடி தேதி!

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT