தற்போதைய செய்திகள்

கரோனா: உலக அளவில் பலி எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியது

கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,07,556 -ஆக உயர்ந்துள்ளது.  

DIN

கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,07,556 -ஆக உயர்ந்துள்ளது.  

உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 39,07,556-ஆக உள்ள நிலையில்,  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,03,68,337 -ஆக அதிகரித்துள்ளது. 

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 18,03,68,337 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,07,556 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 16,50,85,789  பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,13,74,992 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 81,427 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,44,49,004 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 6,18,294-ஆக உள்ளது. 

இதேபோல், இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்‍கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

SCROLL FOR NEXT