தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு  

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினர் மீண்டும் காப்பு காட்டில் விட்டனர்.

திருவள்ளூர் அருகே வயலூர் கிராமத்தைச் சேர்ந்தோர் புதன்கிழமை வயலுக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள 40 அடி விவசாய கிணற்றில் 2 வயதுடைய ஆண் மான் ஒன்று தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்க முற்படும் போது தவறி விழுந்த மான் தத்தளித்து கொண்டிருந்தது. 

திருவள்ளூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆண் புள்ளிமான்.

இதைப்பார்த்த விவசாயிகள் உடனே மப்பேடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், விவசாயிகள் உதவியுடன் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை மீட்டனர். அதையடுத்து மீட்கப்பட்ட மானை வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் பாதுகாப்பாக கொண்டு விட்டனர். பின்னர் துள்ளிக்குதித்து காட்டிற்குள் ஓடியது புள்ளிமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT