முகப்பு
தற்போதைய செய்திகள்

3 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள் 

கரோனா பொது முடக்கம் மற்றும் மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, ஏறத்தாழ 3 மாதங்களாக மீன்பிடிப்பை கைவிட்டிருந்த நாகை மீனவர்கள், விசைப் படகு மற்றும் பைபர் படகு மூலமான மீன்பிடிப்புக்காக புதன்கிழமை கடலுக்குச்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
3 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள் 
பகிர்:



நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்கம் மற்றும் மீன்பிடித் தடைக்காலம் காரணமாக, ஏறத்தாழ 3 மாதங்களாக மீன்பிடிப்பை கைவிட்டிருந்த நாகை மீனவர்கள், விசைப் படகு மற்றும் பைபர் படகு மூலமான மீன்பிடிப்புக்காக புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். 

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஏப். 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14- ஆம் தேதி வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டது.

மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14 -ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தாலும், கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் விசைப் படகு மீன்பிடிப்புடன், பைபர் படகு மீன்பிடிப்பையும் கைவிட்டிருந்தனர். கரோனா பரவல் கடந்த ஓரிரு வாரங்களாகக் குறையத் தொடங்கியிருப்பதால், ஜூன் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிப்பை மீண்டும் தொடங்குவது என நாகை மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்

இதன்படி, நாகை மீனவர்கள் புதன்கிழமை காலை விசைப் படகு மூலமான ஆழ்கடல் மீன்பிடிப்பையும், பைபர் படகு மூலமான மீன்பிடிப்பையும் மேற்கொள்ள  நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கடலுக்குச் சென்றனர்.  3 மாதங்களுக்குப் பின்னர் கடலுக்குச் செல்வதையொட்டி, மீன்பிடிப்புக்குப் புறப்படும் முன்பாக மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு தீப, தூப வழிபாடுகளை மேற்கொண்டனர். 

புதன்கிழமை ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் விசைப் படகுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான படகுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அளவில் கரை திரும்பும். இதனால்,  கடந்த 3 மாதங்களாக களையிழந்திருந்த நாகை மீன்பிடித் துறைமுகம் வரும் ஞாயிற்றுக்கிழமை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.