முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: காங். - திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு

புதுவையில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
புதுச்சேரி: காங். - திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு
பகிர்:

புதுவையில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர்  சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திமுக சார்பில் புதுச்சேரி திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவகுமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.