தற்போதைய செய்திகள்

ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசி இன்று இந்தியா வருகை

DIN


கரோனா நோய்த்தொற்று எதிராக ரஷ்யா தயாரித்துள்ள "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழலில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரிக்கும் கோவாக்சின் தயாரிக்கும் தடுப்பூசிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவதாக ரஷ்யா தயாரிக்கும் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு, இன்று சனிக்கிழமை ஹைதராபாத் வருகிறது. 

நாட்டில் மூன்றாவதாக ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசியும் வருவதால், தடுப்பூசி போடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 "ஸ்புட்னிக்-வி" தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையை ரெட்டிஸ் நிறுவனம் முடித்தது. 

இதையடுத்து அவசரத் தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம். 

மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாதத்தில் 2 லட்சம் தடுப்பூசிகளும், அடுத்த மாதம் 50 லட்சம் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT