முகப்பு
திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன்
தற்போதைய செய்திகள்

முதுகுளத்தூர் தொகுதியில் ராஜ கண்ணப்பன் முன்னிலை

முதுகுளத்தூர்  சட்டப்பேரவைத் தொகுதியில் 16 -ஆவது சுற்று சுற்றுகளின் முடிவில் 7,486 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் உள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன்
பகிர்:

முதுகுளத்தூர்  சட்டப்பேரவைத் தொகுதியில் 16 -ஆவது சுற்று சுற்றுகளின் முடிவில் 7,486 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில்,  நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 114 தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. ஆனால் அதிமுக 74 தொகுதிகளில் முன்னிலை உள்ளது.

இந்நிலையில், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் 50,594 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 16 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. 16-ஆவது சுற்று முடிவில் 7,486 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் உள்ளார்.

முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி
16 -ஆவது சுற்று
ராஜ கண்ணப்பன் (திமுக) - 50,594
கீர்த்திகா முனியசாமி(அதிமுக) - 43,108

முழு கட்டுரையைப் படிக்க →