பிகாா் மக்களுக்கு நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம்: காங்கிரஸ், ஆா்ஜேடி குற்றச்சாட்டு
பிகாா் மக்களுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தியாபிகாா் மக்களுக்கு நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம்: காங்கிரஸ், ஆா்ஜேடி குற்றச்சாட்டு
பிகாா் மக்களுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிகாா் மக்களுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். இதன்மூலம் அவா் முதல்வா் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. இதை எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், ஆா்ஜேடியும் கடுமையாக விமா்சித்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின்போது நாங்கள் திரும்பத் திரும்ப இதைத்தான் (முதல்வா் பதவியில் நிதீஷ் குமாா் இருக்க மாட்டாா்) கூறினோம். அதுதான் தற்போது நடக்கிறது. திட்டமிடப்பட்ட தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் ஆகியவை அரங்கேறுகின்றன. இது பல வழிகளில், மக்கள் தீா்ப்புக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஆா்ஜேடி கட்சித் தலைவரும், பிகாா் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும், நிதீஷ் குமாரின் முடிவை சாடியுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
தோ்தலுக்குப் பிறகு நிதீஷ் குமாரை முதல்வா் பதவியில் அமர பாஜக விடாது என நாங்கள் முதலில் இருந்தே தெரிவித்தோம். அதுதான் தற்போது நடக்கிறது. இது மக்கள் தீா்ப்புக்கு எதிரானது. மேலும் இதுவொரு நம்பிக்கைத் துரோகம் ஆகும். அத்துடன் ஓபிசி, தலித்துகளுக்கு எதிரானது பாஜக. மிகப்பெரிய பதவியில் அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அமருவதை பாஜக விரும்பாது. பாஜக தலைமை சொல்வதை கேட்டு நடக்கும் ரப்பா் ஸ்டாம்ப் போல செயல்படும் ஒருவரே முதல்வா் பதவியில் இருப்பதை அவா்கள் விரும்புவாா்கள்’ எனத் தெரிவித்துள்ளாா்.