தற்போதைய செய்திகள்

மே 4இல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

மே 4ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் உணர்ந்து எங்கள் ஆட்சியை நடத்துவோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என தெரிவித்த அவர் அதற்கு முன்பாக மே 4ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT