முகப்பு
தற்போதைய செய்திகள்

சீமான் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
சீமான் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பகிர்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சீமான் மற்றும அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சீமானை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

தந்தையை இழந்து வாடும் சீமானுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →