தற்போதைய செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN


ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து ஜப்பான் வானிலை மையம் கூறுகையில், ஹோன்சு கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 5.28 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக சில பகுதிகளில் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT