முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவு

அசாம் மாநிலம் சோனித்பூரில் செவ்வாய்க்கிழமை ரிக்டர் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 18 மே, 2021 at 6:22 PM
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவு
பகிர்:

அசாம் மாநிலம் சோனித்பூரில் செவ்வாய்க்கிழமை ரிக்டர் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய்க்கிழமை மாலை 5.33 மணியளவில் அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கடியில் 19 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

Advertisement

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அடுத்தடுத்த 3 நாள்கள் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.