தற்போதைய செய்திகள்

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

DIN


திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1346-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதைமுன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், பகுதி செயலாளர்கள்  கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ உள்ளிட்ட  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருஉருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு  உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து முத்தரையர் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்கிறீர்களா? என்னென்ன பாதிப்புகள் வரும்?

101 அறிஞர்களின் ஓவியங்கள் வரைந்து 14 வயது சிறுவன் கின்னஸ் சாதனை முயற்சி!

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

SCROLL FOR NEXT