தற்போதைய செய்திகள்

வீரகனூரில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சீல் வைப்பு, அபராதம் விதிப்பு

வீரகனூரில் சமூக இடைவெளியைக்கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்ததுடன், அபராதமும் விதித்தனர்.

DIN

தம்மம்பட்டி: வீரகனூரில் சமூக இடைவெளியைக்கடைபிடிக்காத ஹோமியோபதி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்ததுடன், அபராதமும் விதித்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் பழைய பேருந்துநிலையம் அருகே ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருபவர் மருத்துவர் சீத்தாராமன். இவரது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகளவில் நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக ,மாவட்ட ஆட்சியர்க்கு புகார் சென்றது.

இதனையடுத்து தலைவாசல் வட்டார மருத்துவர் லதீஸ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அல்லிமுத்து, கலியபெருமாள், சுந்தரராஜன், என்எம்எஸ் செல்வம் , வீரகனூர் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காததால், மருத்துவனைக்கு ,அதிகாரிகள் குழுவினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் மருத்துவர் சீத்தாராமனுக்கு ரூ.5000 அபராதம் விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT