அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தம்பி கே.எஸ். தஸ்தகீர் காலமானார்
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் தம்பி கே எஸ் தஸ்தகீர்(45) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தம்பி கே.எஸ்.தஸ்தகீர்(45) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
கே.எஸ் தஸ்தகீர் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கரோனா தொற்று குணமடைந்த நிலையில், நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் நண்பர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நேரில் வர வேண்டாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.