முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை, போபாலில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டி விற்பனை

கரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

மும்பை: கரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது. மும்பை மற்றும் போபாலில் பெட்ரோல் விலை தொடர்ந்து ரூ.100க்கும் அதிகமாக விற்பனையானது.

மும்பையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.47 காசுகாளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.45 காசுகளாகவும் விற்பனையானது. மத்திய பிரதேசம்  மற்றும் போபாலில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.93.37 ஆகவும் நிலவியது.

தலைநகர் தில்லியில் ஒரு சிறிய ஏற்றத்துடன் முறையே லிட்டருக்கு ரூ.94.23 மற்றும் ரூ.85.15 ஆக விற்பனையானது. இதுவே பெட்ரோல் லிட்டருக்கு 29 காசுகளாகவும் மற்றும் டீசல் 26 காசுகளாகவும் அதிகரித்துள்ளது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.94.25 ஆகவும் டீசல் விலை ரூ.87.74 ஆகவும் விற்பனையானது. மதிப்பு சேர்க்கப்பட்ட வரியைப் பொறுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →