முகப்பு
தற்போதைய செய்திகள்

மேல்மங்கலம் வராகநதியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இரு மாணவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
மாணவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர்
பகிர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இரு மாணவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராகநதியில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆற்றில் குளிக்கச் சென்ற வேத பாடக சாலையை சேர்ந்த மாணவர் சுந்தரநாராயணன் மற்றும் மணிகண்டன் இருவரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.'

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காணாமல் போன மாணவர்கள் சென்னை மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

இருவரையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.