தற்போதைய செய்திகள்

வறுமைக் குறியீட்டில் பிகார், உத்தரப்பிரதேசம் முன்னிலை: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

DIN

நிதிஆயோக் தரவுகளின்படி இந்தியாவில் வறுமையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் எம்பிஐ எனப்படும் பலபரிணாம வறுமை குறியீடு தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் மக்கள்தொகைக்கேற்ப நிலவும் வறுமை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் வறுமையான மாநிலங்களின் பட்டியலில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

பிகாரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 51.91 சதவிகிதத்தினர் வறுமையில் உள்ளதாகவும், அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவிகிதத்தினரும், உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவிகிதத்தினரும் வறுமையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தப் பட்டியலில் கேரளம்(0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%) மற்றும் தமிழ்நாடு (4.89%) உள்ளிட்ட மாநிலங்கள் இறுதி நான்கு இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்குழந்தைகள் இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு மற்றும் வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட 12 தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT