வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்.26-இல் ஆலோசனை 
தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்.26-இல் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 26இல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

DIN

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 26இல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT