தற்போதைய செய்திகள்

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா லயோலா கல்லூரி? அமைச்சர் விளக்கம்

DIN

சென்னையில் உள்ள லயோலா கல்லூரி கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் லயோலா கல்லூரி 99 ஆண்டு குத்தகைக்கு கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாகவும், அந்தக் குத்தகை 2021ஆம் ஆண்டு நிறைவடைவதால் மீண்டும் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் எனவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரவின.

இந்நிலையில் இதுதொடர்பான ஆய்வுக்குப் பின் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “சமூக வலைத்தளங்களில் லயோலா கல்லூரி கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கல்லூரி கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு இதனை வருவாய் துறையினரும் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT