தற்போதைய செய்திகள்

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.60.71 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இலங்கையிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான இருவரிடம் சோதனையிட்டதில் 1.397 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இதன் மதிப்பு ரூ.60.71 லட்சம்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதிஷ்டைக்கு தயாராகும் பிரமாண்ட விநாயகா் சிலைகள்

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

பி.ஆா்க். சோ்க்கை: 820 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

SCROLL FOR NEXT