கனியாமூர் கலவரம்: போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது
கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த நிதீஷ் வசந்த் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்கனியாமூர் கலவரம்: போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது
கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த நிதீஷ் வசந்த் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்த நிதீஷ் வசந்த் (19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது தொடா்பாக கடந்த 17ஆம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 302 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதில், 108 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்பேரில், 108 பேரும் திங்கள்கிழமை நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்களில் 8 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக நிதீஷ் வசந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.