தற்போதைய செய்திகள்

செய்ளத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் விழா: திருவிளக்கு பூஜை வழிபாடு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

காலையில் கோயில் பெண்ணடி  மக்கள் பால்குடம் சுமந்து கோயிலுக்கு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து மூலவர் காமாட்சி அம்மனுக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் மண்டபத்தில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர். அப்போது திருவிளக்கு பூஜைக்கன நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். 

திருவிளக்கு பூஜை வழிபாட்டின் போது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த உற்சவர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன்.

இப் பூஜையில் மங்கள ஆரத்தி முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனைகள் நடைபெற்று திருவிளக்கு பூஜை நிறைவடைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத் தலைவர் கே.நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் எஸ். பி. ஏ.நாகராஜன், எஸ்.பி.எம். அன்புக்குமார், அ.கி.சு. யாழ் முருகன், கி.செ. முத்துப்பாண்டியன், இரா.திருஞானம், கா.மகா. சரவணன், ம.இராஜா, பி.பழனியப்பன் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT