தற்போதைய செய்திகள்

தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

DIN

தீபாவளி மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மறுதினம், 25ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், 25ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது,  "வரும், 25ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே 
இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT