ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை(ஜூன் 30) முடிவடைகின்றது.
ஆதாருடன் பான் கார்டு எண்ணை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில், இன்று இணைக்காதவர்கள் நாளையில் இருந்து ரூ.1000 அபராதத்துடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார்-பான் எண்ணை இணைக்க விரும்புவோர் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தில் சென்று தங்களின் இணைப்பு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.