தற்போதைய செய்திகள்

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான்: திருச்சியில் வைகோ பேட்டி

DIN

திருச்சி: கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான் என்று திருச்சியில் மதிமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சுயாட்சியும் கூட்டாட்சியும், மதச்சார்பின்மை, சமூக நீதி, தமிழ் ஆட்சி மொழி கல்வி, நதிநீர் உரிமைகள்,சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன், தூக்கு தண்டனை ஒழிப்பு, தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட 74 தலைப்புகளின் கீழ் மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்த அகம்பாவத்திலும் ஆணவத்திலும் பேசி வருகிறார்கள். தமிழர்கள் மூச்சு விட்டாலே பறந்து போகக்கூடிய ஒரு நாடு கச்சத்தீவை தரமாட்டோம் என கூறுகிறார்கள்.

நெருக்கடி நிலைக்காலத்தில் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்கிற நிலைக்கு திமுக வந்தது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கக் கூடாது என சட்டப்பேரவையில் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். ஆனால் நெருக்கடி நிலைக்காலத்தில் அதை மத்திய அரசு பொருள்படுத்தாமல் தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள்.

ஆரம்பகாலத்திலிருந்தே கச்சத்தீவு நமக்கு தான் சொந்தம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்ற வேண்டும், கச்சத்தீவு தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அது தொடர்பாக நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.

இலங்கையில் தமிழ் இனத்தின் முதல் எதிரி டக்ளஸ் தேவானந்தா.

மதிமுக தன்னிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு. மதிமுகவின் தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளும் விதத்தில் தனி சின்னத்தில் போட்டி என முதல்வரிடமும் தெரிவித்துவிட்டு தான் அறிவித்தோம். மதிமுக சின்னமான பம்பரம் சின்னம் பெற முயற்சித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் செய்த தவறால் பம்பரம் சின்னத்தை இழக்க நேரிட்டது. இந்த நிலையில் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க பொதுச்சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT