தற்போதைய செய்திகள்

தங்கலான் வெளியீடு எப்போது?

தங்கலான் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம், ஜனவரி 26-ல் வெளியாக இருந்தது. ஆனால், படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கலான் மறுதேதி அறிவிக்கபடாமல் தள்ளிச்சென்றது. படத்தின் பணிகளும் இன்னும் முடிவடையாததால் திட்டமிட்டபடி வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூன் 26-ஆம் தேதி தங்கலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT