தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையாகிறது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், புதன்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,730-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
ஆனால், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து ரூ.86.40-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.100 குறைந்து ரூ.86,400-க்கும் விற்பனையாகிறது.