தற்போதைய செய்திகள்

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

DIN

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை தனியார் கல்லூரி அருகே கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு புறநகர் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பேருந்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி(50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார்.

மேலும், விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

SCROLL FOR NEXT