தற்போதைய செய்திகள்

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது.

DIN

அருணாச்சலப் பிரதேசத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையை இணைக்கூடிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

திபாங் பள்ளத்தாக்கை இணைக்கூடிய பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவதாக அருணாசல முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.

இது குறித்து பெமா கண்டு தனது எக்ஸ் பக்கத்தில், “ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருந்தினேன்.

இந்த சாலை, திபாங் பள்ளத்தாக்குடன் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை சரிபடுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

SCROLL FOR NEXT